7 பேரையும் விடுதலை செய்யக் கோரி மனித சங்கிலி போராாட்டம்!

7 பேரையும் விடுதலை செய்யக் கோரி மனித சங்கிலி போராாட்டம்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி, மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனைக் கூறினார். அந்தவகையில், மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

“தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிளது. இந்த தீர்மானத்தினை ஆளுநருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதனை வலியுறுத்தி மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 18 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net