மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு – ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய கந்தக்குட்டி நவரெட்ணம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை, பிரதான வீதியை அண்டியுள்ள கடையொன்றிலிருந்து மற்றுமொரு சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 25 வயதுடைய அரசமணி தனூஷியன் என்பவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net