விடுதலைப் புலிகளுடன் தமிழ் மொழியும் மௌனித்துவிட்டது!

விடுதலைப் புலிகளுடன் தமிழ் மொழியும் மௌனித்துவிட்டது!

விடுதலைப் புலிகளுடன், தமிழ் மொழியும் மௌனிக்கப்பட்டு விட்டது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மொழித் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும், தமிழ் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டது.

இன்றைக்கு எத்தனை பேர் தமிழ் பண்பாடு, கலாசார, பாரம்பரியத்துடன் வாழ்கின்றோம். ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியை கேட்டுப் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net