கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை!

கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்து நிற்க, பொருட்கள் இறக்க தடை!

பாடசாலை ஆரம்பிக்கும் முடிவடையும் நேரங்களில் நெல்லியடி – வதிரி – மாலுசந்தி வீதியில் கனரக வாகனங்கள் உட்செல்ல, தரித்துநிற்க, பொருட்கள் இறக்க தடை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் அண்மையில் பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பாடசாலை நேரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் இடையூறுகளை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Copyright © 7496 Mukadu · All rights reserved · designed by Speed IT net