கொழும்பிலுள்ள கடைக்கு சாப்பிடச் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!

கொழும்பிலுள்ள கடைக்கு சாப்பிடச் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி!

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த சாப்பிட்டின் அடியில் முழு பல்லி ஒன்று இருந்தமையை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த உணவினை சாப்பிட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகத்தின் உரிமையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டுள்ளனர். எனினும் அவர் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்லியுடன் உணவு வழங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net