திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை!

திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் இன்று காலையில் இருந்து பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழல் மற்றும் வீதிகள் சோதனை செய்யும் பணிகளில் ஆலய நிர்வாகமும் தொண்டர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்றிரவு அன்னதான மடத்திற்கு முன்னர் ஆலமரத்தின் கீழ் வைக்கப்பட்ட சிவலிங்கம் இன்று காலை இனம்தெரியாத சிலரால் உடைக்கப்பட்டிருந்தது.

ஆலயத்தின் மன் பிரதான சிலை புனரமைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த பழைய லிங்கமே அன்னதான மடத்தின் முன்பாக வைக்கப்பட்டது. அந்த லிங்கமே சிலரால் உடைக்கப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்தே இங்கு பதற்றநிலமை எற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை கேள்வியுற்ற இளைஞர்கள் பக்தர் குறித்த இடத்தில் கூடியதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இந்நிலையில் பதற்றத்தை தடுக்க பொலிஸார் பேச்சவாரத்தையில் ஈடுபட்டதுடன் நிர்வாகத்துடனும் கலந்துரையாடி நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

குறித்த இடத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து யுத்தின் பின்னர் அடாத்தாக கடைகளை வைத்துள்ள பெரும்பான்மையின வியாபாரிகளே அங்குநிலையாக தங்கியுள்ளனர்.

அவர்கள் மகிந்த ராஜபக்சகாலத்தில் முறையான அனுமதியொ வியாபார நடமுறையோ பின்பாற்றாது பலாத்காரமாக வந்தவர்கள் என நகரசபை நிர்வாகம் குறிப்பிடுகின்றது.

படையினரின் பாதுகாப்பு நிலமை அதிகமான இந்த ஆலய சூழலில் இவ்லிங்கத்தை யார் உடைத்தது என்பதே பொதுமக்களின்கேள்வியாக விருந்தன. அன்னதான மடத்திற்கும் ஆலயத்திற்குமிடையில் 54 கடைகள் அடாத்தாக 2007இலிருந்து அரசியல் செல்வாக்குடன் நிறுவி செயற்படுத்தி வருகின்றனர்.

இது ஆலய வழிபாட்டிற்குரிய மக்கள் நடமாடும் பிரதேச மாகும். இதனை அகற்றவேண்டும் என பல்வேறு கோரிக்கைள் உள்நாட்டிலுள்ள அரசியல் தலமைகளிடமும் அதிகாரிகளிடமும், ஐ.நாவரையும் எழுத்துமூலமாக வழங்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக மாவட்ட செயலகத்தில் கூட்டங்கள் நடாத்தப்பட்டது.

கடந்த 26ஆம் திகதி நடந்த கூட்டத்தில் அங்கிருந்து கடைகளை வெளியேற்றவும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான பதில் ஏற்பாட்டை நகரசபை செய்யவும் கோரப்பட்டது.

இக்கூட்டத்தில் பாரளுமன்ற உறுப்பினர் புஞ்சிநிலமே,க.துரைரெட்ணசிங்கம், அரச அதிபர்கள்.அதிகாரிகள் ஆலய நிருவாக விற்பனை கடையுரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த கடைகள் அகற்றப்படவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனை விரும்பாதவர்கள் இவ்வாறான நாசகார வேலையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிவராத்திரி காலத்தில் கோயில் மாத்திரமின்றி முழநகரமுமே சோடிக்கப்பட்டு சுவாமி நகர்வலம்வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் தினங்களில் சிவராத்திரியின் பின்னர் தொடர்ந்து 5 நாட்கள் நகர்வலத்திற்கான அறிவிப்பும் அதற்கான ஆயத்தங்களும் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வருந்தத்ததக்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் மேலதிக நடவடிக்கைளை பொலிஸார் மற்றும் நிருவாகத்தினரும் பொதுஅமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இடத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் கட்சிப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் வருகைதந்து ஆலோசனைகளையும் மேலதிக நடவடிக்கைளிலும் ஈடுபட்டதுடன் இளைஞர்கள் பொது மக்களை அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net