ஏறாவூரில் மின் கம்பத்துடன் மோதி கார் விபத்து!

ஏறாவூரில் மின் கம்பத்துடன் மோதி கார் விபத்து!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்த காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

வீதியின் குறுக்கே திடீரென மாடு வந்தமையால் கார் வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் ஏறாவூர் பிரதேசம் எங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மின் இணைப்பை சீரமைத்து மீள விநியோகிப்பதற்கான சாதகங்கள் நேற்று நள்ளிரவு இருக்கவில்லை என்பதால் இன்று திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net