பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி!

பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்: 9 மாத குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி!

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கஜோரி, போஜ் மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், உட்பாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து அப்பகுதியில் இந்திய – பாகிஸ்தான் இராணுவத்திற்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net