யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் திருவிழாவில் பட்டாசுக்கொளுத்திய இளைஞரொருவரின் கைகளில் தீப்பற்றியதால், அவரின் வலது கைவிரல்கள் ஐந்தும் எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – குறுநகர் பகுதியில் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net