யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு.

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு.

யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவ­லர் பிரி­வு­க­ளில் மக்­கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்றும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடுவிப்புக்கான பத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர்.

காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

Copyright © 1888 Mukadu · All rights reserved · designed by Speed IT net