அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது!

அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது!

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும், கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 40 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் தமிழர் தரப்பால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுக்கூடி ஆராய்ந்தன.

இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்பாடி விடுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பீ.ஆர்.எல்,எப்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

மேலும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net