அபிநந்தனின் வைத்திய சான்றிதழ் வெளியானது!

அபிநந்தனின் வைத்திய சான்றிதழ் வெளியானது!

விமானி அபிநந்தனுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படையின் விங் கொமாண்டர் அபிநந்தனின் முதுகு எலும்பின் கீழ் பகுதியிலும் காயம் காணப்படுவதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ மருத்துவமனையில் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இவ்விடயம் வெளியாகியுள்ளது.

குறித்த காயம் விமானத்தில் இருந்து வெளியே குதித்தபோது ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பரசூட்டில் இறங்கியபோது பாகிஸ்தானியர்கள் தாக்கியதில் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் படையினரால் கடந்த 27ஆம் திகதி சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன், இம்மாதம் முதலாம் திகதி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, மருத்துவ பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net