கடந்த இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் பலி!

கடந்த இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் பலி!

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதையில் நடந்துசென்றவர்கள் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பாதையில் பயணிப்பதானது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனால் ரயில் பாதையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெரும்பாலான கட்டடங்கள், தனியார் வகுப்புகள் ரயில் பாதையை அண்மித்து காணப்படுவதும், ரயில் விபத்துக்களுக்கான காரணம் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரயில் பாதையில் சென்ற இருவர் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பாடசாலை மாணவர் ஒருவரும் பாடசாலை மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – கோட்டையிலிருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net