இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்!

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்!

இலங்கையில் பாரிய கொள்ளையில் பெண்கள் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளின் ATM அட்டைகளை திருடி பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும் கும்பலங்களில் பெண்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு பெண்களே தலைமை தாங்குகின்றனர்.

களுத்துறையில் பிரபல வர்த்தகரான சீனாவில் இருந்து கட்டட பொருட்கள் கொண்டு வரும் மொஹமட் ருகஷி மொஹமட் என்பவரின் ATM அட்டை திருடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கொள்ளை கும்பல் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ATM அட்டைகளுக்காக பணப்பைகளை திருடும் நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வங்கிகளின் தகவல் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்பின் தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிபதி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net