வவுனியாவில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் கடும் சேதம்!
வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் வவுனியா ரயில் நிலைய வீதியிலுள்ள இலங்கை வங்கி தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இராணுவத்தினர் சிலர் தமது வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.
எனினும் கை பிரேக் இயக்கி வைக்கப்படவில்லை. இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் பள்ளத்தை நோக்கி திடீரென்று உருண்டு சென்று 25மீற்றருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதி நின்றுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.