மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கடவுச்சீட்டு ரத்து.

மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கடவுச்சீட்டு ரத்து.

திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் மனைவியரை கைவிட்டதாக சுமார் 45 இந்தியர்களின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.

வெளிநாட்டுவாழ் இந்தியர்களில் திருமணம் முடிந்து மனைவியரை கைவிட்டவர்கள் குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகத்தின் அமைப்பின் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது சுமார் 45 பேர் மனைவியரை கைவிட்டு வெளிநாடுகளில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Copyright © 2115 Mukadu · All rights reserved · designed by Speed IT net