கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு.
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார்.
தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவரே வெட்டியதாக சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரையும் தேடிவருகின்றனர்.