கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை!
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியில் உள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.