கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து பொலிசார் தேடுதலிற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றிடம் அனுமதி கோரியிருந்தனர்.

அதற்கமைய குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் வெடிபொருட்கள் இருப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலிற்கமைய பொலிசார் தேடுதல் மேற்கொள்வதற்காக மன்றில் அனுமதி கோரியிருந்தனர்.

மன்றின் அனுமதியுடன் குறித்த கிராமத்தின் வாய்க்கால் பகுதியில் நீர் வெளியேற்றப்பட்டு குறித்த வெடிபொருட்கள் பொலிசார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net