வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு

வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு

வவுனியா – நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகமொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நெடுங்கேணி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் வடக்கில் ஏற்படுத்தபட்டுள்ள வேலைதிட்டங்கள் பற்றியும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலை திட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், அரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் க.பரந்தாமன், அரச அதிகாரிகள், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7822 Mukadu · All rights reserved · designed by Speed IT net