கடாபியின் தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்.

பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர் ஆதவன்(கடாபி)அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.

தமிழீழ தாய்நிலத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் மிகுந்த நம்பிக்கையை பெற்ற ஒரு பெரும் தளபதியை தந்த வீரத்தாய்க்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்கின்றோம்.

தாய்நிலத்துக்காக உழைத்த அம்மையாரின் கணவர் ஆறுமுகம் அவர்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியைகள் நாளை நெல்லியடி அல்வாய் மேற்கில் காலை 11.30க்கு நடைபெறும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net