நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம்,பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், கலந்து கொண்டதோடு அரசிற்கெதிராகவும் அரசியல்வாதிகளிற்கெதிராவும் கோசங்களை எழுப்பி பதாதைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net