கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்.

சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டிருந்தார்.

சர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இன்றைய சவால்கள் தொடர்பில் வெளிப்படுத்தும் பெண்கள் மாநாடாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பெண் மாவீரர்களான மாலதி, அங்கயற்கன்னி ஆகியோரின் படங்களும், தியாகி அன்னை பூபதி அவர்களின் படமும் வைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பா.ம உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பெண்களிற்கு பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்களில் ஐம்பது வீதம் பெண்களிற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

இதேவேளை புதிதாக பதவி ஏற்ற கனேடிய பிரதமர் ஐம்பது வீதம் அமைச்சரவையில் பெண்களிற்கு வழங்கி ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தலிலும் பெண்களிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டமை தொடர்பிலும், போராட்ட வரலாற்றில் பெண்கள் ஆற்றிய பங்கு தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net