மருதங்கேணி வைத்திய சாலை முன் உண்ணாவிரதம்!

மருதங்கேணி வைத்திய சாலை முன் உண்ணாவிரதம்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்.

ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும்.

குறித்த கோரிக்கையை முன் வைத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

தமது கோரிக்கை கள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

Copyright © 3290 Mukadu · All rights reserved · designed by Speed IT net