வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது!

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது!

வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து போதை பொருளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதுடையவர்கள் ஆவர்.

அவர்களது பையில் இருந்து இரண்டு கிராம் ஹெரோயின் மீட்கபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Copyright © 0815 Mukadu · All rights reserved · designed by Speed IT net