வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
லக்ஜய மைக்ரோ பெனான்ஸ் நிறுவனத்தினால் குறித்த உதவிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்களிற்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பதற்கான முதல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று முதல் கட்டமாக 100 பயனாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், ஏனையோருக்கு எதிர்வரும் நாட்களில் பகிர்ந்தளிக்க உள்ளதாக நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.