மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்!

மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்!

ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 70இற்கும் மேற்பட்ட மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக இந்த கூட்டத்தொடரில் செயற்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றைய கருத்தரங்கு “புதிய உலக ஒழுங்கின் கீழ் இனவழிப்புகள்” (Genocides under new order) எனும் தொனிப்பொருளில், தமிழ் நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் ஜீவா டானிங்கினால் தொகுத்து வழங்கப்பட்டது.

குறிப்பாக இந்த கருத்தரங்கில் மன்னார் மனிதப் புதைகுழியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த இந்திய தடயவியல் நிபுணர் முனைவர் SAVIOR SELVA SURESHஇன் உரையானது மிகவும் காத்திரமாக அமைந்திருந்ததுடன், இலங்கையின் தமிழினவழிப்பு பற்றிய தெளிவான பார்வையை பார்வையாளர்களிடம் உருவாக்கியது.

மேலும் அவர் கூறுகையில், மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வு அறிக்கையானது சர்வதேச விதிமுறைகளை பின்பற்றவில்லை” என்பதை அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இக் கருத்தரங்கில் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர் VIJAYAKUMAR NAVANEETHAN மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் SAKTHIVEL MADHAVAN ஆகியோர் கலந்து கொண்டு புதிய உலக ஒழுங்கிற்கேற்ப இலங்கை அரசு எவ்வாறாக தமிழீழத்தில் திட்டமிட்ட கட்டமைப்புசார் தமிழின அழிப்பை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றதென தெளிவாக எடுத்துரைத்தனர்.

இவர்களுடன் குர்திஸ்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் HEMAN RAMZE MAHMOODஉம் கலந்து கொண்டு, அங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக விளக்கியிருந்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net