பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது!
பண ரீதியான அபிவிருத்தி மட்டும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு சாத்தியப்பாடாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு கிழக்கைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக தனியே பண ரீதியான அபிவிருத்தி மட்டும் எமது பிரதேசங்களுக்கு சாத்தியப்பாடாக இருக்கமுடியாது.
எமது மக்களுடைய மீள் குடியேற்றம் என்பது வீடு, மலசலகூட வசதிகள், இலவச மின்சாரம் அல்லது வாழ்வாதார திட்டங்கள் மட்டுமல்ல. இன்னும் பல விடயங்கள் காணப்படுகின்றன.
எனினும் இந்த நாட்டின் பிரதமரின் கீழ் வடக்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளமையால் சாத்தியமான பல விடயங்களை உருவாக்க முடியும் என்று நாம் நம்பிக்கை வைக்கின்றோம்” என்று தெரிவித்தார்.