முதன்முறையாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இயந்திரம்.
யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் செயற்பாடுகள் இன்றிலிருந்து யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ். மாவட்ட காச நோய் தடுப்பு வைத்திய அதிகாரி தெரிவித்தார் .
இது குறித்து வைத்தியர் யமுனாநந்தா நேற்று (வியாழக்கிழமை) விளக்கமளித்தார் “தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தினால் இந்த இயந்திரம் யாழ். காசநோய் தடுப்பு பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நோயாளர்கள் இலவசமாக சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். நோயாளர் பரிசோதிக்கப்படும்போது மருத்துவர் நேரடியாக அவற்றை அவதானிக்க முடியும்.
யாழ்.மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வியந்திரம் பொருத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.