வவுனியாவில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்.
வவுனியா – ஓமந்தை, சேமமடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சேமமடு பகுதியில் வயல் காவலுக்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கால் மற்றும் கைகளில் வாள் வெட்டு காயங்களுடன் வசந்தகுமார் (வயது 37) என்பவரும், கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் கருணாகரன் (வயது 33) என்பவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.