செம்மலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டுமானங்கள் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தவிட்டார். இன்றைய வழக்கில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இவ்வழக்குடன் இணைந்த வகையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் வரும் 22 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 2013 ஆண்டு குறித்த பிரதேசம் தொல்லியல் திணைக்களத்துக்குரியதென பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு விகாரையொன்றை நிறுவவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.