உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி.

உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் இடம்பெற்று வருகின்றது.

தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த கண்காட்சி மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே.குமணனால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net