யாழில் பயணிகளிடம் பாரிய நிதி மோசடி செய்த தனியார் நிறுவனம்!

யாழில் பயணிகளிடம் பாரிய நிதி மோசடி செய்த தனியார் நிறுவனம்!

யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்த தனியார் விமான பயணச் சீட்டு அலுவலகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர் என தெரிவித்து சுமார் 20 மேற்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனியார் விமான பயணச் சீட்டு அலுவலகம் ஒன்றினால் பயணிகளிடம் சுவிற்சர்லாந்து, கனடா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு பயணச்சீட்டுக்கான கட்டணம் இலட்சக்கணக்கில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் உங்களது பயணச்சீட்டு இரத்தாகியுள்ளது, எனவே மீண்டும் பணத்தைச் செலுத்தி பதிவு செய்யுங்கள் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளதுடன், பயணிகளுக்கு முன்னர் செலுத்திய கட்டணமும் திரும்ப செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 50இற்கும் மேற்பட்டவர்கள் குறித்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய அந்த நிறுவனத்தின் முகாமையாளரிடம் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அவர் நேற்று தலைமறைவாகியிருந்தார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினமும் முறைப்பாடு செய்துள்ளதுடன், குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7881 Mukadu · All rights reserved · designed by Speed IT net