மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை : கண்டுகொள்ள மறுக்கின்றது அரசு!

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை : கண்டுகொள்ள மறுக்கின்றது அரசு!

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து, சேவையை மீள ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட காசநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சி. யமுனானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையானது, கடந்த வருடம் தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான எந்தவோர் ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

அந்தக் காணியை வேறொரு தேவைக்கு பயன்படுத்தவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

அதனை காசநோய் வைத்தியசாலையாக மீளப் பயன்படுத்துவதற்கு அரசு விரும்பவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், காசநோய் வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காசநோயை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் காசநோயால் பாதிக்கப்பட்ட 303 பேரில் 12 பேர் உயிரிழந்ததாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

மயிலிட்டியிலிருந்த காசநோய் வைத்தியசாலை கடந்த 30 வருடங்களாக படையினரால் ஆக்கிரமிக்க்பபட்டிருந்தது.

இதனையடுத்து கோப்பாயில் தற்காலிகமாக வைத்தியசாலை இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net