ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு.
முல்லைத்தீவில் பிரசித்தி வாய்ந்த தண்ணீரூற்று – ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலய மூலஸ்தானம் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு, பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது ஆலயத்தின் தெற்கு நுழைவாயில் இரும்புக்கதவை உடைத்து உட்புகுந்த விசமிகள் மூலஸ்தானத்தை சேதப்படுத்தியதுடன், பிள்ளையாருக்கு அணிந்திருந்த வெள்ளி முடி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் முள்ளியவளை பொலிஸார், விசேட தடயவியல் பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.