கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி இன்று கையளிப்பு.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று பி.ப 3மணிக்கு ஆரம்பமானது.
முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டிடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி திறந்து வைத்தார்.
தொடர்ந்து குறித்த கட்டிடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் துடுப்பட்டத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த விளையாட்டு மைதானம் வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயன்பெறவுள்ளது.
குறித்த கட்டிட தொகுதிக்கான அடிக்கல் முன்னால் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2011ம் ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு நீண்ட வருடங்களின் பின்பு மக்கள் பாவணைக்காக இன்று கையளிக்கப்பப்படமை குறிப்பிடத்தக்கது.