நாளைய உப குழு கூட்டத்தில் சிறிதரன் உரையாற்றுவார்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளாகத்தில் இடம்பெறும் இலங்கை தொடர்பான முக்கிய உப குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றவுள்ளார்.
பசுமை தாயக அமைப்பானது ஏற்பாடு செய்துள்ள இவ் உப குழுக் கூட்டமானது ஜெனிவா வளாகத்திலுள்ள குழு அறையில் நாளை நண்பகல் 12 தொடக்கம் 1 மணி வரை இடம்பெறவுள்ளது.
மேலும் இக் கூட்டத்தில் லண்டன் மனிதவுரிமை செயற்பாட்டாளர் டிர்ட்றே மர்னோல், சுவிஸ் நாட்டின் மனிதவுரிமை செயற்பாட்டாளர் யூவிஸ் வோவி, பசுமை தாயகம் அமைப்பின் பிரதிநிதி மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் மற்றும் பிரான்ஸ் மனிதவுரிமை தமிழர் நிலையத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் எஸ்.வி.கிரருபாகரன் ஆகியோர் இதன்போது உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.