நீராடச் சென்ற குடும்பத் தலைவர் பலி!

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் பலி!

மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குருநகரைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து சாட்டி கடற்கரைக்குச் நீராடச் சென்றுள்ளனர் இதன்போது மேற்படி நபர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதும், கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த நபரை மீட்டுள்ளதுடன், அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Copyright © 0868 Mukadu · All rights reserved · designed by Speed IT net