அதிகாலையில் கோர விபத்து – யாழிலிருந்து கொழும்பு சென்ற நால்வர் பலி – 4 பேர் படுகாயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Toyota ரக வான் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட 8 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.