வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது.
வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகே ஆயுதங்களுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த ஜவரை நேற்று (17.03) அதிகாலை 01.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நள்ளிரவில் அலவாங்கு , மண்வெட்டி , கோடாலியுடன் நின்ற தென்னிலங்கையினை சேர்ந்த 32, 35, 43, 48, 54 வயதுடைய ஜவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.