கொக்காவில் பகுதியில் வன விலங்கொன்று விபத்தில் பலி.

கொக்காவில் பகுதியில் வன விலங்கொன்று விபத்தில் பலி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை வன விலங்கொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.

குறித்த வன விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

நேற்று குறித்த பகுதியில் குறித்த விலங்கின் உடல் ஏ9 வீதியில் காணப்பட்டுள்ளது.

குறித்த விலங்கு இரை தேடி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்டபோது விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது. உயிரிழந்த விலங்கு சிறுத்தையின் உடலமைப்பை கொண்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net