புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்.

வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாதகம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்வசம் இன்று சிறப்பாக இடம்பெறுகிறது.

வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு முன் விளக்கு வைக்கும் நிகழ்வு இடம்பெற்று பொங்கலுக்கான பண்டங்களை சேகரிக்கும் மாட்டு வண்டிகள் யாழ்ப்பாணம் புத்தூர் நோக்கி புறப்படும்.

அவ்வாறு புறப்படும் மாட்டு வண்டிகள் பொங்கலுக்கான பண்டங்களை சேகரித்துக்கொண்டு பொங்கல் தினமான பங்குனி உத்தர நாள் காலை ஆலயத்தை சென்றடையும்.

அவ்வாறே இன்றும் பண்டங்களை சேகரித்த மாட்டு வண்டிகள் புத்தூரிலிருந்து ஏ9 பிரதான வீதி வழியாக பரந்தன் வந்தடைந்து அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடாக புளியம்பொக்கனை ஆலயத்தைச் சென்றடைந்துள்ளன.

இன்று(21) ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறுகிறது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net