வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை.

வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரை.

பேயாடி கூழாங்குளத்தில் இந்து ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ள புத்த விகாரையின் காணியை பௌத்த மதகுரு தமக்கு கோரியுள்ள நிலையில் அது தொடர்பாக பேயாடிகூழாங்குளம் மக்கள் நேற்று மாலை அங்குள்ள முனியப்பர் ஆலயத்தில் கலந்துரையாடியிருந்தனர்.

1995 ஆம் ஆண்டு அப்பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின் இராணுவத்தினர் தாம் அமைத்த இராணுவ முகாமில் இராணுவ வழிபாட்டிற்காக சீமெந்தினால் புத்தருடைய சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்தனர்.

ஆனால் தற்போது அந்தப் பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட போதும் அந்தப் புத்தர் சிலை அவ்விடத்தில் இருந்து அகற்றப்படவில்லை.

இந்நிலையில், வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் குறித்த புத்தர் சிலை அமைந்துள்ள காணியை ஒப்படைக்கும் படி மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதுக்குளம் வட்டார உறுப்பினர் ப.சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net