வவுனியாவில் சாராயம் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில் சாராயம் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!!

வவுனியா நெளுக்குளத்தில் பௌர்ணமி தினமான நேற்று (20.03.2019) சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் விசேட போதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டில் வைத்து சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய சாராயத்தை கொள்வனவு செய்பவர்கள் போல சென்ற பொலிசார் அவரை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து இரண்டரை போத்தல் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net