வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டிற்கு வரும் மக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையொப்பங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளிற்கு அனுப்பி வைக்கும் வகையில் குறித்த கையெழுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.