தமிழக மக்கள் தூய்மையான அரசியலை உணர்வார்கள்!

தமிழக மக்கள் தூய்மையான அரசியலை உணர்வார்கள்!

நாடாளுமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதன் மூலம் தமிழகம் முன்னேற்றரமான பாதையில் பயணிக்கவுள்ளதாக, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

“மக்களின் நலனை நோக்காகக் கொண்ட பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. எதிர்க்காலத்தில் கொண்டுவரும்.

தமிழகம் முன்னேற்ற பாதையையும், வளர்ச்சிப் பாதையையும் பார்க்கப் போகின்றது. அந்தவகையில் ஒரு தூய்மையான அரசியலைப் பார்க்கப் போகின்றது” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net