வட்டுவாகல் கடற்படை முகாம் கடற்படையினர் மின்சாரத்தை வீண்விரையம்!
இலங்கை மின்சார சபை வழங்கும் மின்சாரத்தை முல்லைத்தீவு – வட்டுவாகல் கடற்படை முகாம் கடற்படையினர் வீண்விரையம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட்டுவாகல் பிரதாக கடற்படை முகாம் கவலரன்களை அண்டிய பகுதிகளில் கடற்படையினரால் இணைக்கப்பட்டிருக்கும் 1000 வட்ஸ் மீன் விளக்குகள் பட்டப் பகலில் தினமும் எரிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முல்லைத்தீவில் அண்மை நாட்களாக இலங்கை மின்சார சபை அறிவித்தல் விடுக்காமல் தினமும் மின் துண்டிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று இரவு முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.