யாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு!

யாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் துண்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் யமுனா ஏரியைச் சேர்ந்த சேது அன்ரனி (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் விபத்தில் படுகாயமைடந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net