இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா?

இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா?

விவசாயத்துறையை விட பாதுகாப்பு துறைக்கு சுமார் நான்கு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

விவசாயத்துறையை விட, பாதுகாப்பு துறைக்கு சுமார் நான்கு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் இந்த அவையில் அதனை யாரும் சுட்டிக்காட்டியதாக கேள்விப்படவில்லை.

ஏன் அவர்கள் அப்படி சுட்டிக்காட்டவில்லை என்பதும் தெரியவில்லை. பாதுகாப்பு துறைக்கு இவ்வளவு தொகையை ஒதுக்குகின்றீர்களே நீங்கள் இன்னொரு நாட்டுடன் யுத்தம் செய்யப்போகின்றீர்களா? அல்லது மீண்டும் எமது மக்களை அழிப்பதற்கு யுத்தத்தை தொடங்க போகின்றீர்களா?

இல்லையெனில் இராணுவ அரசாங்கத்தை உருவாக்க போகின்றீர்களா என்பது தான் என்னுடைய கேள்வி என அவர் கூறியுள்ளார்.

Copyright © 4407 Mukadu · All rights reserved · designed by Speed IT net