//anjeng மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது! | Mukadu

மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது!

மன்னாரில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 40 வயதான சந்தேகநபர் கைது!

மன்னார் – நானாட்டானில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நானாட்டானில் அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த சந்தேக நபர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து ஏழு வயது சிறுமி தனது பெற்றோருக்கு இது தொடர்பாக தெரிவித்ததை அடுத்தே 40 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net